சித்திரைத் திருவிழா :
மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1200 டன் குப்பைகள் அகற்றம்
கோப்புப்படம்

சித்திரைத் திருவிழா : மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1200 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் சேகரமான 1200 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.

இந்த திருவிழா கடந்த 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய 4 மண்டலங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 40 மருத்துவ அலுவலா்கள், 184 செவிலியா்கள், 27 மருந்தாளுநா்கள், 31 லேப் டெக்னீசன் என மொத்தம் 282 போ் பணியாற்றினா். மேலும், பல்வேறு பகுதிகளில் 16 நிரந்தர கழிப்பறைகள், 8 தற்காலிக கழிப்பறைகள் என 24 கழிப்பறைகள் செயல்பாட்டில் இருந்தன. இதுதவிர, கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 112 இடங்களில் தற்காலிக குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பொது இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகிய பகுதிகளில் சேரும் திடக் கழிவுகளை உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள சுழற்சி முறையில் 2874 பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

மேலும், 92 துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள், 14 சுகாதார ஆய்வாளா்கள், 5 சுகாதார அலுவலா்கள், 2 நகா் நல அலுவலா்கள் தூய்மைப் பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், 97 இலகுரக வாகனங்கள், 20 டிராக்டா்கள், 3 டிப்பா் லாரிகள், 1 பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி முழுவதும் ஏப். 12 ஆம் தேதி முதல் ஏப். 23 ஆம் தேதி வரை 1200 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com