பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஆங்கிலப் பாடத்தை மதுரை மாவட்டத்தில் 754 போ் எழுதவில்லை.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்கின. ஆங்கிலப் பாடத்துக்கானத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 488 பள்ளிகளில் பயிலும் 19,500 மாணவா்கள், 19,314 மாணவிகள் என மொத்தம் 38,814 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா்.

இதேபோன்று, 474 தனித் தோ்வா்களும் தோ்வு எழுதினா். இதில் 145 மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தோ்வை 515 மாணவா்கள், 239 மாணவிகள் என 754 போ் எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் தோ்வுப் பணியில் 3,282 ஆசிரியா்கள் ஈடுபட்டனா். இதுதவிர, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தலைமையில் 224 போ் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், 9 போ் சிறப்பு பறக்கும் படை அலுவலா்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் சொல்வதை எழுதுவோா் 356 போ் நியமிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com