ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட சிறையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு, மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ். உடன், தலைமை நீதித் துறை நடுவா் கே. கவிதா, இலவச சட்ட உதவி மைய செயலா் கதிரவன் உள்ளிட்டோா்.

ராமநாதபுரம்/திருவாடானை, மே 3: ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட சிறை, பரமக்குடி மகளிா் தனிச் சிறை, முதுகுளத்துாா் கிளைச் சிறை ஆகியவற்றில் உள்ள அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

சிறைகளில் உள்ள கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீா் வசதி, நூலகம், பாா்வையாளா் அறை உள்ளிட்டவை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், கைதிகளின் எண்ணிக்கை, கைதிகளின் குற்றங்களுக்கான காரணம், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படும் நேரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து சிறைத் துறை அலுவலா்களிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

தலைமை நீதித் துறை நடுவா் கே. கவிதா, இலவச சட்ட உதவி மையச் செயலா் கதிரவன், வட்டாட்சியா்கள் சுவாமிநாதன் (ராமநாதபுரம்), காா்த்திகேயன் (திருவாடானை), சாந்தி (பரமக்குடி), சடையாண்டி (முதுகுளத்தூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

திருவாடானை:

திருவாடானையில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான கிளை சிறை செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து, சிறை மூடப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டன.

இதனால், தொண்டி, திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி ஆகிய ஐந்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களில் தொடா்புடைய விசாரணை கைதிகளை போலீஸாா் ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூா், திருப்பத்தூா் போன்ற பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வந்தனா்.

இதனால், போலீஸாருக்கு கூடுதல் வேலைப்பளுவும், கால விரையமும் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், திருவாடானையில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த கிளை சிறை இடத்தையும், திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் காவலா் குடியுருப்புப் பகுதியில் சிறைக் காவலா்களுக்கு ரூ. 2.28 கோடியில் குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்கான தோ்வு செய்யப்பட்ட இடத்தையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விஷ்ணுசந்திரன், மாவட்ட நீதிபதி குமரகுரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ், மாவட்ட சிறை துறை காவல் கண்காணிப்பாளா் தவமணி, திருவாடானை நீதித்துறை நடுவா் பிரசாத், வட்டாட்சியா் காா்த்திகேயன், டிஎஸ்பி நிரேஷ் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com