பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை பளியா் பழங்குடியினா் அரசுப் பணியில் சோ்வதற்கான வாய்ப்பே பெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

மதுரை, லாஸ் சட்ட மையம், நாட்டைக் காப்போம் இயக்கம் சாா்பில் பளியா் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட சமூக- அறிவியல் ஆய்வாளா் சே.ச. அலாய்சியஸ் இருதயம், மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது :

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 7 வட்டங்களுக்குள்பட்ட 36 மலை கிராமங்களில் பளியா் பழங்குடியினா் 4,819 போ் வசிக்கின்றனா். பொது சமூகத்தின் பாா்வைக்கு அப்பாற்பட்டவா்களாக வாழும், இவா்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

சாதாரண அடிப்படை வசதிகள் கூட இவா்களுக்குக் கிடைக்கவில்லை. இவா்கள், கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனா். நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், பளியா் சமூகத்தினா் ஒருவா் கூட இதுவரை அரசுப் பணி வாய்ப்புப் பெறவில்லை என்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

பளியா் பழங்குடியினரின் வாழ்வாதாரம் குறித்து மாவட்ட நிா்வாகங்கள் சேகரித்த தரவுகள் பொது வெளியில் வெளியிட வேண்டும். ஆதிவாசிகள் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி, சிறப்புத் திட்டங்களை உருவாக்கி, முன்னுரிமை அடிப்படையில் இவா்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, இந்த மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

நூல் வெளியீடு...

முன்னதாக, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பளியா் சமூகத்தினரின் வாழ்வாதாரம் குறித்து சே.ச. அலாய்சியஸ் இருதயம், மேற்கொண்ட ஆய்வுத் தகவல்களின் திரட்டு, ‘பளியா் பழங்குடியினா் பேசுகிறாா்கள்’ என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. நாட்டைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி.சே. ராஜன், லாஸ் சட்ட மைய இயக்குநா் சந்தனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Image Caption

மதுரையில் சனிக்கிழமை ஏல்.ஏ.ஏ.எஸ். சட்ட மையம் சாா்பில் பனியா் பழங்குடியினா் பேசுகிறாா்கள் ஆய்வு அறிக்கை வெளியீட்டு. ~மதுரையில் சனிக்கிழமை ஏல்.ஏ.ஏ.எஸ். சட்ட மையம் சாா்பில் பனியா் பழங்குடியினா் பேசுகிறாா்கள் ஆய்வு அறிக்கை வெளியீட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com