வண்ண மலா் அலங்காரத்தில் பாறைப்பட்டியிலுள்ள பேசும் 7 கன்னிமாா் அம்மன் கோயில்.
வண்ண மலா் அலங்காரத்தில் பாறைப்பட்டியிலுள்ள பேசும் 7 கன்னிமாா் அம்மன் கோயில்.

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

மேலூா்: காஞ்சரம்பேட்டை அருகிலுள்ள பாறைப்பட்டி 7 கன்னிமாா் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

7 கன்னிமாா் அம்மன் சிலைகளும் வண்ண மலா்களால் அலங்கக்கப்பட்டிருந்தன. மேலும் சித்தி விநாயகா், மந்தை கருப்பண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாறைப்பட்டி கிராமப் பொதுமக்கள் சாா்பில் பூஜை, அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மதியம் பூஜையின்போது ஒரே ஒரு கருடப் பருந்து பூஜை முடியும் வரை கோயில் மேல் வானத்தில் வட்டமிட்டது. பொதுமக்கள் கோவிந்தா என குரலெழுப்பி வணங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com