பைக்கில் இருந்து தவறி விழுந்து அரசு அதிகாரி சாவு
கீழக்கரை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார்.
கீழக்கரை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார்.
உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் தேவி ஜெயந்தி(32). இவர் கடலாடி யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். திங்கள்கிழமை ஊராட்சி ஆய்வுக்காக வந்த தேவிஜெயந்தி பணியை முடித்துவிட்டு, சத்துணவு அமைப்பாளர் ராமகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கடலாடிக்கு புறப்பட்டார். ஏர்வாடி அருகே இதம்பாடல் பகுதியில் சென்ற போது, தேவி ஜெயந்தி இருசக்கரவாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஏர்வாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

