தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதே போன்று வேர்கோடு பகுதியில் உள்ள தேவாலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜ்,நகர் தலைவர் ராமகிருஷ்;ணன்,வழக்குரைஞர் சோமு, துணைத்தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.