30 ஆண்டுகளாக தூர் வாரப்படாத கமுதி குண்டாறு தடுப்பணை: மழை நீரை சேமிப்பதில் சிக்கல்
கமுதி குண்டாறு தடுப்பணை 30 ஆண்டுகளாக தூர்வாரப்படமால் உள்ளதால் மழை நீரை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கமுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கமுதி குண்டாறு தடுப்பணை 30 ஆண்டுகளாக தூர்வாரப்படமால் உள்ளதால் மழை நீரை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கமுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 1957-ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப்பணித் துறையால் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட 3 தாலுகாக்களின் விவசாயத்திற்காக ரூ.13 லட்சம் செலவில் கமுதி குண்டாறு தடுப்பணை கட்டப்பட்டது. இதில் 10 அடி உயரம் கொண்ட இரும்புக் கதவுகளால் ஆன 15 மதகுகள் உள்ளன. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் தன்மை கொண்டதாக இந்த தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் இந்த குண்டாறு தடுப்பணையை கடந்த 30 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி பராமரிக்கவில்லை. இதனால் தற்போது தடுப்பணை முழுவதும் மண் மேடாகவும் முள்செடிகள் அடர்ந்து புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றின் தடுப்புச்சுவர் சேதமடைந்து உடைந்து காணப்படுகிறது. சிறு மழை பெய்தாலும் வெள்ள நீர் கமுதி நகருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது.
மேலும் குண்டாறிலிருந்து பிரிந்து செல்லும் ரெகுநாதகாவேரி, மலட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகளிலும் தண்ணீர் செல்லும் பாதையில் கருவேல மரங்கள் அடர்ந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் முதுகுளத்தூர் , கடலாடி தாலுகாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஹெக்டேர் பாசன வசதி பெறும் கண்மாய் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கமுதி நீராதாரமாக விளங்கும் கமுதி தடுப்பணை, மற்றும் கமுதியை சுற்றியுள்ள நீர் நிலைகளைத் தூர் வாரி பராமரிக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது கமுதி பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கமுதி குண்டாறை தூர் வாரி சீரமைக்க இதுவரை தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட வில்லை. மத்திய அரசின் நீர் நிலைகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி கொடுத்தால் குண்டாறு தடுப்பணை தூர் வாரி சீரமைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...