பார்த்திபனூர் அருகே சாலை விபத்தில்  முதியவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே தொழுகைக்குச் சென்ற முதியவர் மீது வியாழக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே தொழுகைக்குச் சென்ற முதியவர் மீது வியாழக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பார்த்திபனூர் அருகே பரளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாமுகம்மது (85). இவர் வியாழக்கிழமை அங்குள்ள பள்ளிவாசலுக்குச் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். 
அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த டாடா ஏசி வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈசாமுகம்மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com