திருவாடானை அருகே சனிக்கிழமை மாலை, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரிலிருந்து குதித்த இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், உறுதிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (28). இவர், திருவாடானை அருகே உள்ள உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை மாலை வழக்கம்போல் தண்ணீர் கொண்டு சென்று இறக்கிவிட்டு, உப்பூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. அதையடுத்து, ஓட்டுநர் சங்கர் உயிர் தப்பிப்பதற்காக கீழே குதித்தார். இருப்பினும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?

சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
