ராம நாதபுரத்தில் கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க பொட்டிதட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்து கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 23 பெரிய ஊருணிகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வைகையில் திறக்கப்பட்ட தண்ணீரால் 14 ஊருணிகள் நிரம்பின. அதில் தற்போது நொச்சியூரணி உள்ளிட்ட 6 ஊருணிகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் தற்போது 50 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீருடன் கடல் நீர் கலந்து அதன் தன்மையும் உவர்ப்பாக மாறி வருகிறது. நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட பருவ மழை குறைந்ததால், நகரில் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நகருக்கு தினமும் 33 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அதன் படி ஒருவருக்கு 61 லிட்டர் குடிநீர் கிடைப்பதாக அதிகாரிகள் கூறி னாலும், 50 லிட்டருக்கும் குறைவாகவே கிடைக்கிறது. குடிநீருக்கு நகராட்சி மாதம் சுமார் ரூ.10 லட்சம் செலவிடுகிறது.
இதைத் தவிர்த்து, 127 ஆழ்துளைக்கிணறுகள் மூலம் தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 திறந்தவெளி கிணறுகள் மூலம் 1 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கிறது. நகராட்சி பகுதி களுக்கு தினமும் சுமார் 36 லட்சம் லிட்டர் நீர் விநியோகிக்கப்படும் நிலையில், கோடையில் அது 25 லட்சம் லிட்டராக குறைக் கப்படும். கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஊருணி பகுதியில் உள்ள திறந்த வெளிக் கிணறுகளையே நம்ப வேண்டியுள்ளது. ஆனால், ஊருணி நீரும் வேகமாக வறண்டு வருகின்றன. எனவே புதிய நீராதார திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்.
பரமக்குடி அருகேயுள்ள பொட்டிதட்டி பகுதி வைகை ஆற்றிலிருந்து ராமநாத புரத்துக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 2011இல் திட்டமிடப்பட்டது. அதற்காக முதல் கட்டமாக புதிய நீர் நிரப்பும் தொட்டி கட்டப்பட்டது. திட் டம் ரூ.11 கோடியில் செயல்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், திட்டத்துக்கான நிர்வாக ஒப்புதல் கிடைக்கவில்லை.
புதிய திட்டம் செயல்படுத்தப் பட்டால் 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான குடிநீர் தினமும்
கிடைக்கும். இதனால் கோடையில் பற்றாக்குறை இன்றி குடிநீர் விநியோகிக்கலாம் என்கிறார்கள் நகராட்சி பொறியாளர்கள்.
பாதுகாப்பில்லா குடிநீர்: காவிரிக் கூட்டுக் குடிநீர், நகரில் உள்ள 8 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் சேகரித்து விநியோகிக்கப்படுகிறது. தொட்டிகளில் நீரை ஏற்றுவ தற்கு முன்னதாக திரவ குளோரின் சேர்க்கப்பட்டு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு சுத்தி கரிக்கப்படாமலேயே விநியோகிக்கப்படுகிறது. இப்பணியும் 15 நாள்களுக்கு ஒரு முறையே கண் காணிக்கப்படுகிறது. ஆகவே 15 நாள்கள் இடைவெளியில் தொட்டிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டால் அதை கண்டறிய வழியில்லை.
கடந்த டிசம்பரில் நகராட்சி லேத்ஹவுஸ் மேல்நிலைத் தொட்டியில் விழுந்து இறந்தவர் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது கண் டறியப்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே தற்போதும் குடிநீர் விநியோகம் நடக்கிறது.
தொட்டிகளில் நீரை ஏற்றும் பொறுப்பை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், விநியோகிக்கும் பொறுப்பை நகராட்சியும் ஏற் றுள்ளன. ஆகவே சுகாதார கண்காணிப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் எழுகிறது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக உதவிப் பொறியாளர் பிரபு கூறியது: இந்தாண்டு மார்ச் மாதம் வரை ராமநாதபுரத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. தினமும் தண்ணீரின் தரம் பரி சோதிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றார்.
கோடையில் மட்டுமின்றி நகரின் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க பொட்டி தட்டி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண் டும். அதற்கு நிர்வாக ஒப்பு தலைப் பெற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.