காரங்காடு  சதுப்பு நிலக் காடுகளை பாதுகாக்க  வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் உலக சதுப்புநில காடுகள் தினத்தை முன்னிட்டு விழிப்பணர்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் உலக சதுப்புநில காடுகள் தினத்தை முன்னிட்டு விழிப்பணர்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் வனசரகம் சார்பில் சதுப்பு நில காடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில்  சதுப்புநிலக் காடுகளை சுற்றுலாப்பயணிகள் சென்று பார்வையிடுவதற்கு, வனத்துறை சார்பில் படகு சவாரி மற்றும் தனிநபர் படகு சவாரி செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு  காரங்காட்டில் சதுப்பு நிலக் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் மற்றும் இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. 
அதனைத்தொடர்ந்து தனி நபர் படகுப் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். நிகழச்சி ஏற்பாடுகளை மாவட்ட கடலோர வனச் சரக அலுவலகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com