கடலாடி வட்டம் சிக்கல் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அருகே உள்ள சித்துடையான் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சாயல்குடி, கடலாடி, ராமநாதபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் செல்வராஜ் மகன் ஹரீஸ்குமார் (17) கடந்த திங்கள் கிழமை பிளஸ் 2 தேர்வு எழுதிய பின்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மருத்துவர் சரவணன் கூறியது: காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்த ஹரீஸ்குமாரின் முழு மருத்து அறிக்கை வந்த பின்புதான் என்ன காய்ச்சல் என்பது தெரியவரும். கடந்த 3 நாள்களாக சித்துடையான் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.