மாணவிகளை கல்வியிலும், கலையிலும் சிறந்தவர்களாக பெற்றோர் வளர்க்க வேண்டும் என அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் என்.ராஜேந்திரன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அபிநயா நாட்டியாஞ்சலி நுண் கலைப்பள்ளி மாணவி பி.ஆர்.ஜகத் ஜனனி நாட்டிய அறங்கேற்ற விழா சனிக்கிழமை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆர்.முரளிதரன், ராஜா குமரன் சேதுபதி, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ரவிச்சந்திரராமவன்னி, டாக்டர் மதுரம் அரவிந்த், கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி தாளாளர் சுமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை. துணைவேந்தர் என்.ராஜேந்திரன் பேசியது: தமிழர்களின் கலாசாரம் இயல், இசை, நாடகம் தற்போது வளர்ந்து வருகிறது. பெற்றோர், மாணவிகளை கல்வி மட்டுமின்றி பரதநாட்டிய கலையிலும் சிறந்தவர்களாக வளர்க்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆரோக்கிய மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆர்.பரணிக்குமார், டாக்டர் ப.வித்யா பரணிக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.