தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளியில் அரபு மொழி போட்டி
By DIN | Published On : 01st April 2019 06:14 AM | Last Updated : 01st April 2019 06:14 AM | அ+அ அ- |

தொண்டியில் உள்ள இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரபு மொழி போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு பலகை அறக்கட்டளையின் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் செய்யது கமாலுதீன் , அறக்கட்டளை பொருளாளர் ஹிதயத்துல்லா, பள்ளியின் முதன்மை மேலாளர் சகுபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரபு மொழி பாடல் பாடுதல், கதை சொல்லுதல், விநாடி - வினா, நாடகம், சூரா, கிராத், பேச்சு, பாடல், ஹதீஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பலகை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்யது ஹமீது பாக்கர், கலீல் ரஹ்மான், முகமது ஷாப் பாரீஸ், முகமது அஸ்கர்,முகமது முப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் அரபு மொழி ஆசிரியர் அப்துல் ஜப்பார் யூசூபீ வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் முகமது காசிம் யூசூபீ நன்றி கூறினார்.