கல்லூரி மாணவருக்கு கத்திக் குத்து
By DIN | Published On : 12th April 2019 07:13 AM | Last Updated : 12th April 2019 07:13 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திருமூர்த்தி மகன் திருச்செல்வம் (21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்செல்வம் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அய்யனார் கோயில் அருகே மூன்று மர்மநபர்கள் வழி மறித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்ப முயன்ற திருச்செல்வத்தின் கையில் கத்தியால் குத்திவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனராம்.
இதில் பலத்த காயமடைந்த திருச்செல்வம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின்பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் கலைஅரசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.