திருப்பத்தூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
By DIN | Published On : 26th April 2019 01:36 AM | Last Updated : 26th April 2019 01:36 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் 31 பவுன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக ஓட்டுநர் உள்பட 13 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பிலால் நகரைச் சேர்ந்தவர் பஷீர் என்ற சிங்கம் (53). தொழிலதிபர் மற்றும் திமுக பிரமுகரான இவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது வீட்டில் அவரது தாய் மட்டும் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் பீரோவில் இருந்த 31 பவுன் நகைகளை அண்மையில் காணவில்லையாம்.
இதுதொடர்பாக பஷீர் தரப்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிந்து பஷீரிடம் கார் ஓட்டுநராக இருந்த மர்சூக்அலி உள்பட 13 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.