ஆர்.எஸ்.மங்கலம் சார்பு ஆய்வாளர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்
By DIN | Published On : 06th February 2019 08:15 AM | Last Updated : 06th February 2019 08:15 AM | அ+அ அ- |

ஆர்.எஸ்.மங்கலத்தில் காவல்துறை அதிகாரிகளின் பெயரை கூறி, கடைகளில் பொருள்கள் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கிய காவல் சார்பு ஆய்வாளர், ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாண்டி. இவர், காவல் துறை அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி, கடைகளில் பணம் கொடுக்காமல் பொருள்கள் வாங்கிய காட்சி சமூக வலைதளத்தில் பரவின. இதுதொடர்பாக எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் திருவாடானை டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், சார்பு ஆய்வாளர் பாண்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறினர்.
தற்போது இடமாறுதலுக்குள்ளான சார்பு ஆய்வாளர் பாண்டி மீது ஏற்கெனவே புகார் எழுந்து, அதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...