திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்ட மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் பயன்பாட்டிற்கு வராமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதை தடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா கல்லூர் ஊராட்சியில் கண்மாய் பகுதியில் ரூ.1லட்சம் செலவில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு கட்டப்பட்ட, இந்தக் கூடத்தில் தற்போது வரை மண்புழு உரம் தயாரிக்கும் பணி தொடங்காமல் மூடிக் கிடக்கிறது. இந்த கூடம் திறந்து கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் திருவாடானை ஊராட்சியில் உள்ள 47 ஊராட்சிகளிலும் இதே நிலையில் தான் உள்ளது. இதனால் அரசின் நிதி பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. எனவே இதை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.