கேரள அரசை கண்டித்து ராமேசுவரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 01:29 AM | Last Updated : 04th January 2019 01:29 AM | அ+அ அ- |

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததால், கேரள அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சபரிமலைக்கு இரு பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த கேரள அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் என்.எஸ்.கே. வீதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், இந்து முன்னணி நகரத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சேவா பாரதி மாநில நிர்வாகி முனியசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜசேகர் சிறப்புரையற்றினார். பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகி பாரதிராஜன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...