மலட்டாறு பள்ளியில் தீ விபத்து விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 14th June 2019 07:52 AM | Last Updated : 14th June 2019 07:52 AM | அ+அ அ- |

கடலாடிஅருகே மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாயல்குடி தீயணைப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை செய்து காட்டப்பட்டது.
முகாமுக்கு பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான வி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி, பள்ளியின் முதல்வர் அங்காளஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீ விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்து சார்பு ஆய்வாளர் முனியசாமி விளக்கவுரை ஆற்றினார். இதில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.