ராமநாதபுரத்தில் தமிழ் புத்திலக்கியத் திருவிழா
By DIN | Published On : 14th June 2019 07:50 AM | Last Updated : 14th June 2019 07:50 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் புத்திலக்கியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.
தமிழ்ச்சங்கம் அரவிந்த் அரங்கத்தில் நடைபெறும் விழாவுக்கு பேராசிரியர் மை.அப்துல்சலாம் தலைமை வகிக்கிறார். இதில் அகிலனின் சித்திரப்பாவை எனும் தலைப்பில் கவிதா கதிரேசனும், தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள் எனும் தலைப்பில் கவிஞர் சந்துருவும், புதுமைப்பித்தனின் கதைகள் எனும் தலைப்பில் கவிஞர் நா.ஜெயராமனும், பாரதி பாடல் எனும் பொருளில் சே.சிவானிஅக்சதாவும், கவிக்கோ அப்துல்ரஹ்மான் கவிதைகள் எனும் பொருளில் பா.தீனதயாளனும், தேமதுரத் தமிழ் எனும் தலைப்பில் கே.செந்தில்குமாரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
தமிழ் புத்திலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த இலக்கிய நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், தமிழ் ஆர்வலர்களும், பேராசிரியர்களும் திரளாக இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.