பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் புதிய கட்டடம்: காணொலி காட்சி மூலம் திறப்பு
By DIN | Published On : 25th June 2019 07:52 AM | Last Updated : 25th June 2019 07:52 AM | அ+அ அ- |

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் ரூ. 53.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பணிமனை வகுப்பு கட்டடத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் ரூ 53.18 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தி உபகரணங்களால் பராமரித்தல் மற்றும் தையல் தொழில்நுட்ப புதிய பணிமனை வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை, முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அரசு தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் வளையானந்தம் தலைமையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் குத்துவிளக்கேற்றினர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம். நாகராஜன், நகர் செயலர் எஸ்.வி. கணேசன், விவசாய அணி ஐ. கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் பிரிவு மாவட்ட துணைச் செயலர் எஸ். நாகராஜன், கட்டுமான சங்க செயலர் செல்வராஜ், ஒப்பந்ததாரர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அரசு தொழிற்பயிற்சி பள்ளி நிர்வாக அலுவலர் சேகர் நன்றி கூறினார்.