தேர்தல் விதிமீறல்: அதிமுக கூட்டணி கட்சியினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 28th March 2019 08:15 AM | Last Updated : 28th March 2019 08:15 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 21 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூர் ஒன்றியத்தின் சார்பில் ராமநாதபுரம் பாஜக, மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அதிமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் அதிகமான வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி பறக்கும்படை அலுவலர் பாலசரவணன் முதுகுளத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் தர்மர் உள்பட கூட்டணிக் கட்சியினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...