மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு
By DIN | Published On : 28th March 2019 08:15 AM | Last Updated : 28th March 2019 08:15 AM | அ+அ அ- |

ராமேசுவரம் அடுத்துள்ள பிரப்பன்வலசையில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பிரப்பன்வலசை ஊராட்சியில் சில நபர்கள் நிலத்தடி நீரை ஆழ்குழாய் கிணறு மூலம் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொதுமக்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்கத் தவறிய நிர்வாகிகளை கண்டித்து, வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது என கிராம பொதுமக்கள் முடிவு செய்து பதாகைகள் வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...