ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: 27 வேட்பு மனுக்கள் ஏற்பு: 9 சுயேச்சை மனுக்கள் நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 08:16 AM | Last Updated : 28th March 2019 08:16 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக, காங், அமமுக வேட்பாளர்கள் உள்பட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிந்தது. இதில் மொத்தம் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 4 பேர் அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளர்கள் ஆவர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், தொகுதித் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆய்வின் அடிப்படையில் மனு ஏற்கப்பட்டவர்கள் விவரம்: என்.நயினார் நாகேந்திரன் (பாஜக), கா.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்), ர. கலைஜோதி (நாம் தமிழர்),ஜி.கேசவ்யாதவ் (பூர்வாஞ்சல் ஜனதா கட்சி), கே.நவாஸ்கனி (திமுக), தி.புவனேஸ்வரி (நாம் தமிழர்), ப.லோகநாதன் (பிரகதிசீல் சமாஜ்வாதி), ஜா.விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்), அ.ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாற்று வேட்பாளர்).
சுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்கள்-அ.அசன்அலி, இ.அல்லாபிச்சை, மா.ஆனந்தராஜ், செ.ஆனந்த், ந.ஆனந்த், நா.கதிரவன், ந.கருப்பசாமி, பா.கிருஷ்ணராஜா, கா.குருந்தப்பன், தேவசித்தம், து.நடராஜன் (அமமுக மாற்று), சு.பிரபாகரன், ச.முகம்மதுஅலிஜின்னா, க.ரஜினிகாந்த், ஆ.வனிதா (அமமுக மாற்று), வ.விநாயகமூர்த்தி, எச்.ஜவஹிர்அலி, ரா.ஜெயபாண்டியன்.
தேசிய மக்கள் கட்சி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல என்றும் அதனால் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த எபனேஸ்வருக்கு, சுயேச்சை வேட்பாளரைப் போல்10 பேர் முன் மொழியாமல், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் போல 5 பேர் முன் மொழிந்திருந்தனர்.
இதனால் அவரது மனுவானது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரைப் போல ஆவணங்கள், முன்மொழிந்தவர்கள் விவரங்கள் சரியாக இல்லை என்ற அடிப்படையில் மேலும் 8 சுயேச்சைகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...