9 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகத்தை திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 01:22 AM | Last Updated : 05th May 2019 01:22 AM | அ+அ அ- |

கமுதி அருகே 9 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நூலகக் கட்டடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி அருகேயுள்ள புல்வாய்க்குளத்தில் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டில் ரூ. 6.80 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. மேலும், இந்த நூலகத்துக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்பட்டன. ஆனால், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது முதல் இன்று வரை திறக்கப்படவில்லை. மேலும், உரிய பராமரிப்புப் பணிகளும் செய்யாததால், கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதேநேரம், கட்டடத்துக்குள் வைக்கப்பட்டுள்ள நூல்களும் கரையான் அரித்து அழிந்து வருகின்றன. இதனால், சுமார் ரூ. 10 லட்சம் அரசு நிதி வீணடிக்கபட்டுள்ளது.
எனவே, இந்த நூலகக் கட்டடத்தை மராமத்து செய்து உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...