காவல் நிலையத்தில் மது போதையில் ரகளை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 19th May 2019 04:24 AM | Last Updated : 19th May 2019 04:24 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ஜான் (40). இவர், சனிக்கிழமை மாலை மதுபோதையில் சக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வயர்லெஸ் கருவியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, தலைமைக் காவலர் ஜானை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.