முதுகுளத்தூரில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 19th May 2019 04:23 AM | Last Updated : 19th May 2019 04:23 AM | அ+அ அ- |

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி மாடத்தி(55). இவர் சாயல்குடி அருகே ஓ.பனைக்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாயல்குடிக்கு பேருந்து வந்தது. கூட்டநெரிசலில் பேருந்தில் ஏற முயன்ற, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாடத்தி முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சார்பு -ஆய்வாளர் கோடீஸ்வரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.