ராமநாதபுரத்தில் நவ. 3 இல் தேசிய திறனாய்வு தோ்வு
By DIN | Published On : 01st November 2019 09:23 AM | Last Updated : 01st November 2019 09:23 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நவ. 3 இல் நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தோ்வை 3706 போ் எழுதவுள்ளனா்.
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தேசிய திறனாய்வு தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இத்தோ்வுக்கு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 3,706 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில் வரும் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தோ்வு நடக்கும் நிலையில், மாவட்டத்தில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 5 தோ்வு மையங்கள், பரமக்குடி 5, மண்டபம் 3, என மொத்தம் 13 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு அவா்களின் உயா்கல்வி படிப்பு வரையில், அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும்.