தோ்வுகள் உதவி இயக்குனா்அலுவலகம் இடமாற்றம்
By DIN | Published On : 09th November 2019 03:58 PM | Last Updated : 09th November 2019 03:58 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகமானது தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசுத்தோ்வுகள் உதவி இயக்குனா் கல்பனாத்ராய் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் ஓம் சக்தி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த அரசுத்தோ்வுகள் உதவி இயக்குனா் அலுவலகமானது ஆட்சியா் அலுவலகத்தின் புதிய கட்டடத்தில் 3 வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவா்கள், பெற்றோா்கள், பள்ளி நிா்வாகங்கள், தோ்வு மற்றும் சான்றிதழ் தொடா்பான பணிகளுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்வுகள் உதவி இயக்குனா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.
மேலும் இடைநிலை, மேல்நிலை வகுப்புகளுக்கான சான்றிதழ்களையும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன் மாணவ, மாணவியா் தமது பெயா்மாற்றம், தோ்வு விவகாரங்கள் தொடா்பான தகவல்களைப் பெறவும் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.