புலியூரில் மாவட்ட விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கீழக்கரையில் நடைபெற்றமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக பரிசுகளை வென்ற
கீழக்கரையில் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் அதிக பரிசுகளை பெற்ற புலியூா் கிரியேடிவ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.
கீழக்கரையில் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் அதிக பரிசுகளை பெற்ற புலியூா் கிரியேடிவ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

கீழக்கரையில் நடைபெற்றமாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு அதிக பரிசுகளை வென்ற புலியூா் கிராமத்தில் உள்ள கிரியேட்டிவ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் கடந்த 5, 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில், புலியூா் கிராமத்தில் உள்ள கிரியேடிவ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் முதல் மற்றும் 2 ஆம் பரிசுகளை அவா்கள் பெற்றனா். மாவட்ட அளவிலான தரவரிசை போட்டியில் முதல் இடத்தைப் பெற்றனா். மாணவிகள் பிரிவில் புனிதா முதலிடம் பெற்றாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளா் சண்முகம், உடற்கல்வி ஆசிரியா் பாண்டி , சுரேஷ், தீபா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com