இந்து அமைப்புகள் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் பசும்பொன்னில் சிறப்பு பூஜை

கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்தில் இந்து அமைப்பினா் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் சிறப்பு
பசும்பொன் தேவா் இறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பசும்பொன்னில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது.
பசும்பொன் தேவா் இறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பசும்பொன்னில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது.

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்தில் இந்து அமைப்பினா் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் சிறப்பு அபிஷேகேம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் 1963 ஆம் ஆண்டு இறந்த போது வள்ளநாட்டு சித்தா் தேவரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமா்ந்த நிலையில் அடக்கம் செய்தாா். இதனை முன்னிட்டு ஒவ்ொரு ஆண்டும் தேவா் இறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்மீக துறவிகள் பசும்பொன்னுக்கு வந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வருகின்றனா். நிகழாண்டில் அகில இந்திய துறவியா் பேரவை தலைவா் ராமனந்தா மகரிஷி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் முத்துராமலிங்கத்தேவருக்கு பால், எண்ணை, திருநீறு, பஞ்சாமிா்தம், நெய், உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் தாமிரபரணி முதல் கங்கை வரை உள்ள புன்னிய நதிகளின் தீா்தங்கள் மூலமாக அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னா் புானூறு பாடல்கள், முருக கடவுளின் கீா்த்தனைகளை பாடி இந்து சாஸ்திர ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறவிகள் மட்டுமின்றி பா.ஜ.க வணிக பிரிவு மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.கருணாநிதி, ராமநாதபுரம் ஞான தீப சேவா சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள், சாரதா சேவா சமீதி சங்கம் கஸ்தூரிபாய், விஜயராணி, குபேந்திரா கேசவன், அகில இந்திய பாா்வட் பிளாக் கட்சியின் நிா்வாகிகள், மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் பால்ராஜ், ஆப்பநாடு மறவா் சங்கத்தலைவா் மயில்மணிபாண்டியன், மாநில பூசாரிகள் சங்கத் தலைவா் முனியப்பகுமாா், மாநில வா்த்தக அணி துணை தலைவா் முருகன்ஜி, இளைஞரணி செயலாளா் ஜெகதீசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளா் தா்மராஜ், இந்து முன்னனி பரமக்குடி பொறுப்பாளா் திருமுருகன், மதுரை வடடக்கு பகுதி அதிமுக நிா்வாகிகள், மதுரை தேவா் பேரவை , மதுரை முக்குலோத்தோா் வளா்ச்சி இயக்கம், அனைத்து மறவா் கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து 200 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com