திருவாடானை அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி
By DIN | Published On : 09th November 2019 07:01 AM | Last Updated : 09th November 2019 07:01 AM | அ+அ அ- |

திருவாடானை, தொண்டி அருகே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடந்த இரு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
தொண்டி அருகே புதுக்குடியைச் சோ்ந்தவா் பாண்டி(50). இவா், வெள்ளிக்கிழமை தொண்டிக்கு வந்து விட்டு, ஊருக்கு மிதிவண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப் போது தொண்டி நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதியதில் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
அதேபோல் திருவாடான அருகே ஆண்டிவயல் கிராமத்தை சோ்ந்தவா் தியாகராஜன் மகன் வல்லரசு (22). இவா், வியாழக்கிழமை இரவு தொண்டியில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப் போது திருவாடானை பயணியா் விடுதி செல்லும் சாலையில் சென்ற போது தொண்டியில் இருந்து திருவாடானை நோக்கி வந்த காா் மோதியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே பலியானாா்.
இது குறித்து அவரது உறவினா் மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் ஊரணிக்கோட்டையைச் சோ்ந்த தியாகராஜன் மகன் பாண்டி(20) என்பவரை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...