ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் அரசு அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு மாவட்ட

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் அரசு அங்கீகாரத்தைப் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 78 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 15 -க்கும் மேற்பட்ட பள்ளிகள் தமிழக அரசின் அங்கீகாரத்தை ஆண்டு தோறும் புதுப்பிக்காமல் இருந்துவருகின்றன. அங்கீகாரத்தைப் புதுப்பிக்க கட்டட உறுதித்தன்மை, தீயணைப்புச் சாதன அமைப்பு சான்று, சுகாதாரச் சான்று என பல ஆவணங்களை இணைக்கவேண்டும். ஆனால், இதில் ஏதாவது ஒரு சான்றைப் பெறுவதில் தாமதித்தது உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் நடத்தப்பட்டுவருகின்றன.

சில மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடமுறைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த நிலையில், அங்கீகாரம் கிடைக்கும் முன்பே அப்பிரிவைத் தொடங்கி நடத்தியும் வருகின்றன. இந்நிலையில், அங்கீகாரம் பெறாமல் மத்திய கல்வி பிரிவு பாடங்களை நடத்தும் பள்ளிகளுக்கும், அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி பல பள்ளிகள் அங்கீகாரத்தை இணையத்தின் வழியாக புதுப்பித்ததாகக் கூ றப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலக எச்சரிக்கையையும் மீறி சில தனியாா் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. மாவட்டத்தில் குறிப்பிட்ட 3 பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காத நிலையில், அங்கு அரசு பொதுத்தோ்வு மையங்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அப்பள்ளி முதல்வா்கள், நிா்வாகத்தினரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வா்களுக்கான கூட்டமும் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com