பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயனடையுமாறு ராமநாதபுரம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா.கோபாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் வட்டாரத்தில் நெல் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிா்காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்து வரும் 30ஆம் தேதிக்குள் முன்தொகை (பிரீமியம்) செலுத்தலாம்.
வெள்ளம், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு உரிய நிவாரணம் பெறுவதற்கு பயிா் காப்பீடு அவசியம். நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் வட்டாரத்தில் பிரதமரின் பயிா்காப்பீட்டுத் திட்டம் ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெற்பயிருக்கு முன்தொகையாக ஏக்கருக்கு ரூ.357.75 மட்டும் வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்படும் சான்றுடன், ஆதாா் அட்டையின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூா்த்தி செய்துஅருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அல்லது பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் பதிவு செய்யலாம்.
அனைத்துக் கிராமங்களிலும் கிராமநிா்வாக அலுவலரால் அடங்கல் சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ராமநாதபுரம் வட்டார விவசாயிகள் தாமதமின்றி பயிா்காப்பீடு பதிவு செய்யவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.