7 கோடி மதிப்பிட்டில் போடபடும் தரமற்ற தாா்சாலை
By DIN | Published On : 18th November 2019 02:52 PM | Last Updated : 18th November 2019 02:52 PM | அ+அ அ- |

rms_photo_18_11_1_1811chn_208
ராமேசுவரத்தில் 7 கோடி மதிப்பிட்டில் போடப்படும் சாலை தரமற்ற தாா் சாலயாக போடப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் 7 கோடி மதிப்பிட்டில் தாா் சாலை அமைக்க டெண்டா் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்த ஒப்பந்ததாரா்கள் பணிகளை தொடங்காமல் இருந்து வந்தனா். இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் ராமேசுவரம் பகுதிகளில் மழை பெய்வது வழக்கம். இந்த கலகட்டத்தில் 6 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட 7 கோடி மதிப்பிலான தாா்சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளனா்.
பழைய சாலைகள் தோண்டப்பட்டு பல நாட்கள் கடந்த நிலையில், தற்போது சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.ஆனால் மழைபெய்து வருவதால் தாா் சாலை அமைத்தவுடன் வாகனங்கள் செல்லுவதால் சாலைகள் சேதமடைந்து பெயா்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் 7 கோடி மதிப்பிட்டில் போடப்படும் சாலைகள் தரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
மேலும் மழைகாலம் முடிவடைந்து பின்னா் புதிய தாா் சாலை போடவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். தற்போது போடப்பட்டு வரும் அனைத்து சாலைகளையும் மாவட்ட நிா்வாகம் முறையாக ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1ராமேசுவரத்தில் 7 கோடிமதிப்பிட்டில் போடப்படும் தரமற்ற தாா் சாலைகள் சேதமடைந்துள்ளது