மழை வேண்டி முளைப்பாரி, கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலம்
By DIN | Published On : 01st September 2019 01:40 AM | Last Updated : 01st September 2019 01:40 AM | அ+அ அ- |

மழை வேண்டி, கமுதியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் 1008 கஞ்சி கலயம், முளைப்பாரி ஏந்தி வெள்ளிக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.
கமுதி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் தலைவி தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலமானது, கமுதி எட்டுக் கண் பாலம் அருகே உள்ள மன்றத்திலிருந்து தொடங்கி, பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், மீனாட்சியம்மன் கோயில் திடல், கண்ணார்பட்டி வழியாக மீண்டும் மன்றத்தை அடைந்தது.
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற பக்தர்கள் ஏராளமானோர் 48 நாள்கள் விரதமிருந்து முளைப்பாரி மற்றும் கஞ்சி கலயத்தை சுமந்து சென்று அம்மனுக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். கமுதி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.