ஆனந்தூர் முத்து மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 29th September 2019 05:21 AM | Last Updated : 29th September 2019 05:21 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஆனந்தூர் அடுத்துள்ள பச்சனத்திக்கோட்டை முத்து மாரியம்மன் கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்கிற்கு பூ போட்டு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, பொங்கல், சுண்டல் பிரசாதங்கள் வழங்கபட்டன. இதில், சுற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.