உதவித்தொகை விண்ணப்பத்தை பரிசீலிக்க லஞ்சம்: இளநிலை வருவாய் ஆய்வாளர் கைது

உதவித்தொகை வழங்க விண்ணப்பத்தை பரிசீலித்து அனுப்ப ரூ.2 ஆயிரம்லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
உதவித்தொகை வழங்க விண்ணப்பத்தை பரிசீலித்து அனுப்ப ரூ.2 ஆயிரம்லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
உதவித்தொகை வழங்க விண்ணப்பத்தை பரிசீலித்து அனுப்ப ரூ.2 ஆயிரம்லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விவசாயி இறந்த நிலையில், அவரது மனைவிக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பத்தை பரிசீலித்து அனுப்ப ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை வருவாய் ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகேயுள்ளது மாதவனூர். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமு இறந்துவிட்டார். இந்தநிலையில், அவர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்திருந்தார். ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலப் பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உதவித்தொகையை பெறுவதற்கு அவரது மனைவி சேது விண்ணப்பித்திருந்தார்.

அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (29) மனுவை ஆய்வு செய்தார். மேலும், மனுவை பரிசீலித்து முதுநிலை ஆய்வாளருக்கு அனுப்பிட ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என சேதுவிடம் ஈஸ்வரன் கேட்டுள்ளார். இதுகுறித்து சேது ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை சேதுவிடம் கொடுத்து அதை ஈஸ்வரனிடம் தருமாறு கூறினர். பணத்தை சேது செவ்வாய்க்கிழமை காலையில் அலுவலகத்துக்கு வந்து ஈஸ்வரனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கையும் களவுமாக ஈஸ்வரனைப் பிடித்தனர். அவரிடமிருந்து பணத்தையும் கைப்பற்றினர்.

பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சமூகநலப் பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் சோதனையிட்டு ஆவணங்களையும் கைப்பற்றினர். பின்னர் ஈஸ்வரனைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே அலுவலர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், இளநிலை வருவாய் ஆய்வாளர் லஞ்சப் புகாரில் கைதானது ராமநாதபுரம் அரசு அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com