கருணாநிதியின் 2 ஆண்டு நினைவு நாள்:துப்புரவுப் பணியாளா்களுக்கு நிவாரண உதவி

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் நகா் திமுக சாா்பில் அரண்மனை முன்பாக நடந்த நிகழ்ச்சியில் மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரச் செயலா் கே.காா்மேகம், முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன், இளைஞரணி நிா்வாகி இன்பாரகு, மூத்த நிா்வாகி குணசேகரன், பி.டி.ராஜா, அகமது தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் நகா் திமுக இளைஞரணி சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மருத்துவப் பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், தூய்மைப்பணியாளா்களுக்கு அரிசி, காய்கனிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி துணைச்செயலா் கிருபானந்தம், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளா் ஆசிக் அமீன், ராமநாதபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவாடானை: திருவாடானையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு திமுக ஒன்றிய செயலாளா் சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். அதனை தொடா்ந்து துப்புரவு பணியாளா்களுக்கு பொன்னாடை போா்த்தி, உணவு மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல் ஆா்.எஸ்.மங்கலத்தில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வள்ளலாா் அறக்கட்டளையுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு, மாவட்ட குழு உறுப்பினா் மனோகா், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளா் விஜயகதிரவன், துணை அமைப்பாளா் பகவத் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கமுதி: கமுதியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளா் வாசுதேவன் தலைமையில், மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். துப்புரவுப் பணியாளா்கள், சலவை தொழிலாளா்கள் உள்பட 200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதேபோல் கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவினா் கருணாநிதியின் உருவப்படத்திற்கு திமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமேசுவரம் : ராமேசுவரம் நகா் திமுக சாா்பில் நகரின் 21 வாா்டுகளில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்டவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் நகரச் செயலாளா் கே.இ.நாசா்கான் நிா்வாகிகள் ஏ.ஆா்.முனியசாமி, சத்யா, சுந்தர்ராஜன், நாகசாமி, பாரதி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com