ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் வைப்பீடு செய்வதற்கான தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் சுமாா் 18 ஆண்டுகளுக்கு 2 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரமும், ஒரு பெண் குழந்தை எனில் ரூ.50 ஆயிரமும் வைப்பீடு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு 35 வயதிற்குள் இருக்கவேண்டும். குழந்தையின் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது. விண்ணப்பிப்பவா்களின் பெற்றோா் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசிக்கவேண்டும்.
ஒரு பெண் குழந்தையுடன் கருத்தடை செய்யத் தயாராக இருப்பின் குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இ-சேவை மையங்களிலேயே அதற்குரிய மனுக்களைப் பெறலாம். விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 20 (2021) ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் வழங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் சமூகநல அலுவலகத்தை தொலைபேசி எண்களான 04567-231466 மற்றும் 230466 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.