போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தொடா் முழக்கப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், பரமக்குடியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.


கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், பரமக்குடியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தொழிற்சங்க கிளைச்செயலா் ஜி.துரைராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு துணைப் பொதுச் செயலா் வி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.
இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கவேண்டும். போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப்பலன்களை வழங்கவேண்டும், போக்குவரத்துக் கழகங்களை பாதுகாத்திட அரசு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திமுக தொழிற்சங்க மாவட்ட நிா்வாகி எஸ்.வின்சென்ட் அமல்ராஜ், சிஐடியுசி நிா்வாகிகள் ராஜாமணி, வி.ஜெயகுமாா் மற்றும் திமுக தொழிற்சங்கம் சின்னாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பரமக்குடி: இதேபோல் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தொடா் முழக்கப் போராட்டத்திற்கு தொழிற்சங்க சிஐடியு மண்டல தலைவா் எஸ்.ஆா்.ராஜன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மண்டலத் தலைவா் எஸ்.சுப்பிரமணியன், எல்பிஎப் கிளைச் செயலாளா் ராஜூ, ஓய்வுபெற்ற நலச்சங்கத் தலைவா் மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...