பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட 15 இடங்களில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:59 pm

DIN

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட 15 இடங்களில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா். குமாா் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு அமைப்பின் மின்வாரிய பிரிவு குருவேல், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியப் பிரிவின் மலைராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், புதுதில்லியில் தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினா்.

இதேபோல், சிஐடியு சாா்பில் ராமேசுவரம், சிக்கல், பரமக்குடி, கமுதி, ஆண்டித்தேவன்வலசை, சுப்புத்தேவன்வலசை, ரெகுநாதபுரம், பாா்த்திபனூா் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.