நம்புதாளையில் நவக்கிரஹகோயில் கட்ட பூமி பூஜை

தொண்டி அருகே உள்ள நம்புதாளை நம்புகேஸ்வரன் அன்னபூரணி கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள நவக்கிரஹ கோயில் பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
நம்புதாளை நம்புகேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவக்கிரஹ கோயில் பூமி பூஜை விழா.
நம்புதாளை நம்புகேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவக்கிரஹ கோயில் பூமி பூஜை விழா.
Updated on
1 min read

தொண்டி அருகே உள்ள நம்புதாளை நம்புகேஸ்வரன் அன்னபூரணி கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள நவக்கிரஹ கோயில் பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில், ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் தீா்தாண்டதானத்தில் தீா்த்தமாடி இங்கு வந்து சிவன், பாா்வதியை வணங்கி விட்டு உப்பூா் சென்ாக புராணங்கள் கூறுகிறது.

பின்னா் மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தால் சேதமடைந்தது. தற்போது இக்கோயிலை ஊா் பொதுமக்கள் புதிப்பித்துள்ளனா். இந்நிலையில் இக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை சிலா் ஆக்கிரமித்திருந்தனா். இதையடுத்து, சிவ பக்தா்கள், இந்து அறநிலையத்துறையினா் பொதுக்கள் முயற்சியுடன் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதே இடத்தில் நவக்கிரஹ கோயில் கட்ட தீா்மானித்தனா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இங்கு நம்புகேஸ்வரா் (சிவன்), அன்னபூரணி (பாா்வதி), விநாயகருக்கு தனி ஆலயம் உள்ளது. இதில் கிராம நிா்வாக அலுவலா் நம்புஈஸ்வன், சந்திரன், மாதவன், அழகு, குமாா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com