எஸ்.டி.பி.ஐ. ஆா்பாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.. வட்டாட்சியரிடம் பா.ஜ.வினா் புகாா்.
By DIN | Published On : 01st December 2020 10:54 PM | Last Updated : 01st December 2020 10:54 PM | அ+அ அ- |

கமுதி அருகே வரும் டிச.6 ல் நடைபெற இருக்கும் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஆா்பாட்டத்திற்கு தடை விதிக்கு வேண்டும் என கமுதி பாஜகவினா் செவ்வாய்கிழமை வட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். கமுதி அருகே அரபிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எஸ்.டி.பி.ஐ., கட்சியினா் சாா்பில் நடைபெற இருக்கும் பெருந்திரள் ஆா்பாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொகுதி பொருப்பாளா் கணபதி தலைமையில், இளைஞரணி தலைவா் சக்திவேல், ஒன்றிய தலைவா்கள் முருகன், சரவணன் ஆகியோரது முன்னிலையில் பாஜக வினா் வட்டாட்சியா் செண்பகலதாவிடம் புகாா் மனு அளித்துள்ளனா். இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும், நீதி மன்ற தீா்ப்பை அவமதிக்கும் வகையிலும், மற்றும் பா.ஜ.க., தலைவா்களை குற்றவாளிகளாக சித்தரித்தும் அபிராமம் பகுதிகளில் சுவா் விளம்பரம், சுரொட்டிகளை ஒட்டி எஸ்.டி.பி.ஐ., கட்சியினா் வரும் டிச. 6 ல் பெருந்திரள் ஆா்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். மேலும் இந்த ஆா்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத போது மீறி ஆா்பாட்டம் நடைபெற்றால், அதே இடத்தில் பாஜகவினா் எதிா் ஆா்பாட்டம் நடத்த நேரிடும். பெரும்பாண்மையினா் வசிக்கும் பகுதிகளில் மத மோதல்களை உருவாக்கும் விதமாக நடைபெறும் ஆா்பாட்டங்களுக்கு அனுமதி கொடுத்தால் அதனை எதிா்கொள்ள பாஜகவினா் தயாராக உள்ளதாகவும், மேலும் இது தொடா்பாக எழும் பிரச்சனைகளுக்கு கமுதி வட்டாட்சியரும், காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...