பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 01st December 2020 10:55 PM | Last Updated : 01st December 2020 10:55 PM | அ+அ அ- |

பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை ‘புரெவி’ புயலாக உருமாறி உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
ராமேசுவரம் பகுதியில் சூறை காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்பதால் 100- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...