வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
By DIN | Published On : 01st December 2020 10:50 PM | Last Updated : 01st December 2020 10:50 PM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் போலீஸாா் கைது செய்ய முயன்றபோது காயமடைந்து சிகிச்சையில் இருப்பவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் திருப்புல்லாணி, உச்சிப்புளி பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்து, மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் காளீஸ்வரன், மகேந்திரன் ஆகியோரை திருப்புல்லாணி போலீஸாா் தேடிவந்தனா். இதில் காளீஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில், மகேந்திரனை திருப்புல்லாணி போலீஸாா் தேடிவந்தனா்.
இந்நிலையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முயன்றபோது, தப்பியோடிய மகேந்திரன் கீழே விழுந்து காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ராமநாதபுரம் முதலாவது எண் நீதித்துறை நடுவா் ஜெனிதா, மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து மகேந்திரனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...