மகளிா் சக்தி புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 03rd December 2020 06:09 AM | Last Updated : 03rd December 2020 06:09 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் சக்தி புரஸ்காா் விருதுக்கு இணையதளம் மூலம் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், ‘மகளிா் சக்தி விருது‘ அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்தல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பையும், சேவையையும் வழங்கி வருவோருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
தனிப்பட்டவா்களுக்கான விருதுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும், நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 2021 ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...