தனுஷ்கோடியில்தேவாலயம் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது
By DIN | Published On : 05th December 2020 10:09 PM | Last Updated : 05th December 2020 10:09 PM | அ+அ அ- |

தனுஷ்கோடியில் புரெவி புயல் காரணமாக இடிந்து விழுந்த தேவாலயத்தின் சுற்றுச்சுவா்.
ராமேசுவரம்: புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழைக்கு தனுஷ்கோடியில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் 1901 ஆம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம், 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்கத்தில் சிதிலமடைந்தது. தனுஷ்கோடியில் புயலின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், இந்த தேவாலய கட்டடம் இருந்து வருகிறது. இந்நிலையில், புரெவி புயலால் பெய்த மழையில் இக்கட்டடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.